கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சாய்சதுரம் வரைதல் | 8th Maths : Chapter 5 : Geometry
சாய்சதுரம் வரைதல்
கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைப் பயன்படுத்திச் சாய்சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்.
(i) ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம்
(ii) ஒரு பக்கம் மற்றும் ஒரு கோணம்
(iii) இரண்டு மூலைவிட்டங்கள்
(iv) ஒரு மூலைவிட்டம் மற்றும் ஒரு கோணம்
1. ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.34
RO = 5 செ.மீ மற்றும் RS = 8 செ.மீ அளவுகள் கொண்ட ROSE என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: RO = 5 செ.மீ மற்றும் RS = 8 செ.மீ
வரைமுறை:
1. RO = 5 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. R மற்றும் O ஐ மையங்களாகக் கொண்டு, முறையே 8 செ.மீ மற்றும் 5 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை S இல் வெட்டட்டும்.
3. RS மற்றும் OS ஐ இணைக்க.
4. R மற்றும் S ஐ மையங்களாகக் கொண்டு, ஒவ்வொன்றும் 5 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை E இல் வெட்டட்டும்.
5. RE மற்றும் SE ஐ இணைக்க.
6. ROSE என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல்:
ROSE என்ற சாய்சதுரத்தின் பரப்பளவு = (1/2) × d1 × d2 சதுர அலகுகள் = (1/2) × 8 × 6= 24 ச.செ.மீ.
2. ஒரு பக்கம் மற்றும் ஒரு கோணம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.35
LE = 6 செ.மீ மற்றும் ∠L = 65° அளவுகள் கொண்ட LEAF என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க
தீர்வு:
தரவு: LE = 6 செ.மீ மற்றும் ∠L = 65°
வரைமுறை:
1. LE = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. LE கோட்டுத்துண்டின் மீது L இல் ∠ELX = 65° ஐ வரைக.
3. L ஐ மையமாகக் கொண்டு 6 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது LX ஐ F இல் வெட்டட்டும்.
4. E மற்றும் F ஐ மையங்களாகக் கொண்டு, ஒவ்வொன்றும் 6 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை A இல் வெட்டட்டும்.
5. EA மற்றும் AF ஐ இணைக்க.
6. LEAF என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல் :
LEAF என்ற சாய்சதுரத்தின் பரப்பளவு = (1/2) × d1 × d2 சதுர அலகுகள்.
= (1/2) × 6.4 × 10.2 = 32.64 ச.செ.மீ.
3. இரு மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.36
NS = 9 செ.மீ மற்றும் ET = 8 செ.மீ அளவுகள் கொண்ட NEST என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: NS = 9 செ.மீ மற்றும் ET = 8 செ.மீ
வரைமுறை:
1. NS = 9 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. NS இக்கு மையக்குத்துக்கோடு XY ஐ வரைக. அது NS ஐ O இல் வெட்டட்டும்.
3. O ஐ மையமாகக் கொண்டு, O இன் இருபுறமும் 4 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் OX ஐ T இலும் மற்றும் OY ஐ E இலும் வெட்டுமாறு வரைக.
4. NE, ES, ST மற்றும் TN ஐ இணைக்க.
5. NEST என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல் :
NEST என்ற சாய்சதுரத்தின் பரப்பளவு = (1/2) × d1 × d2 சதுர அலகுகள்.
= (1/2) × 9 × 8 = 36 ச.செ.மீ.
4. ஒரு மூலைவிட்டமும் ஒரு கோணமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.37
FR = 7 செ.மீ மற்றும் ∠F = 80° அளவுகள் கொண்ட FARM என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: FR = 7 செ.மீ மற்றும் ∠F = 80°
வரைமுறை:
1. FR = 7 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. F இல் FR இன் இருபுறமும், ∠RFX = ∠RFY = 40° ஐ வரைக.
3. R இல் FR இன் இருபுறமும், ∠FRP = ∠FRQ = 40° ஐ வரைக.
4. FX மற்றும் RP ஆனது M இலும், FY மற்றும் RQ ஆனது A இலும் வெட்டட்டும்.
5. FARM என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல் :
FARM என்ற சாய்சதுரத்தின் பரப்பளவு = × d1 × d2 சதுர அலகுகள்.
= × 7 × 5.9 = 20.65 ச.செ.மீ.