கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.3 | 8th Maths : Chapter 5 : Geometry
பயிற்சி 5.3
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
1. படத்தில் ∠1 ≡ ∠2 மற்றும் ∠3 ≡ ∠4 ஆகும் எனில், ∆MUG ≡ ∆TUB என நிரூபி.
2. படத்திலிருந்து, ∆SUN ~ ∆RAY என நிரூபி.
3. ஒரு கோபுரத்தின் உச்சியானது தரையில் R என்ற இடத்தில் உள்ள ஒரு கண்ணாடியின் மூலம் பிரதிபலித்து பார்க்கப்படுகிறது. ∆PQR ~ ∆STR எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க.
4. படத்தில், ஒரு கம்பத்தினைத் தரையுடன் நிலைநிறுத்தத் தேவையான கம்பியின் நீளம் என்ன ?
5. ரித்திகா என்பவர் 25 அங்குலம் திரை (screen) கொண்ட ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியை வாங்குகிறார். அதன் உயரம் 7 அங்குலம் எனில், திரையின் அகலம் என்ன? மேலும், அவளது தொலைக்காட்சிப் பெட்டகம் 20 அங்குலம் அகலம் கொண்டது எனில், தொலைக்காட்சியை அந்த பெட்டகத்தினுள் வைக்க இயலுமா? காரணம் கூறுக.
மேற்சிந்தனைக் கணக்குகள்
6. படத்தில், ∠TMA ≡ ∠IAM மற்றும் ∠TAM ≡ ∠IMA . P ஆனது MI இன் மையப்புள்ளி மற்றும் N ஆனது AI இன் மையப்புள்ளி எனில், ∆PIN ~ ∆ATM. என நிரூபி.
7. படத்தில் ∠FEG ≡ ∠1 எனில், DG2 = DE.DF என நிரூபி.
8. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் 12 செ.மீ மற்றும் 16 செ.மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க. (குறிப்பு: சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருசமக் கூறிடும்)
9. படத்தில், AR ஐக் காண்க.
10. ∆DEF இல், DN, EO, FM ஆகியவை நடுக்கோடுகள் மற்றும் புள்ளி P ஆனது நடுக்கோட்டுமையம் ஆகும். எனில் பின்வருவனற்றைக் காண்க.
(i) DE = 44 எனில் DM = ?
(ii) PD =12 எனில் PN = ?
(iii) DO = 8 எனில் FD = ?
(iv) OE = 36 எனில் EP = ?