கேள்வி பதில்கள், தீர்வுகள் | வடிவியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு கணக்கு - சதுரம் வரைதல் | 8th Maths : Chapter 5 : Geometry
சதுரம் வரைதல்
(i) ஒரு பக்கம் மற்றும் (ii) ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்போது சதுரம் வரையும் முறைகளைக் காண்போம்.
1. ஒரு பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.40
4 செ.மீ பக்க அளவு கொண்ட LAMP என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
தரவு: பக்கம் = 4 செ.மீ
வரைமுறை:
1. LA = 4 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. L இல், LX ⊥ LA ஐ வரைக.
3. L ஐ மையமாகக் கொண்டு, 4 செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது LX ஐ P இல் வெட்டட்டும்.
4. A மற்றும் P ஐ மையங்களாகவும், ஒவ்வொன்றும் 4 செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை M இல் வெட்டட்டும்.
5. AM மற்றும் PM ஐ இணைக்க. LAMP என்பது தேவையான சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல்:
LAMP என்ற சதுரத்தின் பரப்பளவு = a2 சதுர அலகுகள்.
= 4 × 4 = 16. ச.செ.மீ.
2. ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சதுரம் வரைதல்
எடுத்துக்காட்டு 5.41
8 செ.மீ அளவுள்ள மூலைவிட்டம் கொண்ட RAMP என்ற சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
தீர்வு :
தரவு: மூலைவிட்டம் = 8 செ.மீ
வரைமுறை:
1. RM = 8 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
2. RM இக்கு மையக்குத்துக்கோடு XY ஐ வரைக. அது RM ஐ 0 இல் இருசமக்கூறிடும். 3. O ஐ மையமாகக் கொண்டு, O இன் இருபுறமும் 4 செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் OX ஐ P இலும் மற்றும் OY ஐ A இலும் வெட்டுமாறு வரைக.
4. RA, AM, MP மற்றும் PR ஐ இணைக்க.
5. RAMP என்பது தேவையான சதுரம் ஆகும்.
பரப்பளவைக் கணக்கிடுதல்:
RAMP என்ற சதுரத்தின் பரப்பளவு = a2 சதுர அலகுகள் = 5.7 × 5.7 = 32.49 ச.செ.மீ.